அதிமுக வேட்பாளர் பட்டியல்: 16 லோக்சபா தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தார் ஈபிஎஸ்

March 21st, 2024

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, வட சென்னை ராயபுரம் - மனோ, தென்சென்னை- ஜெயவர்தன் போட்டியிடுகின்றனர். தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி கூறினார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்திருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துள்ளது

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மட்டுமே நிறைவு செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகதான் இந்த தேர்தலில் கூட்டணியை இறுதி செய்வதில் தடுமாறிவிட்டது. தற்போது வரை கூட்டணி பேச்சுவார்த்தை முழுமையாக நிறைவு அடையவில்லை.

இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, வட சென்னை ராயபுரம் - மனோ, தென்சென்னை- ஜெயவர்தன் போட்டியிடுகின்றனர். தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி கூறினார். 

சிதம்பரம் - சந்திரஹாசன் 
மதுரை - சரவணன் 
தேனி - நாராயணசாமி 
வட சென்னை - ராயபுரம் மனோதென் 
சென்னை - ஜெயவர்தன் 
காஞ்சிபுரம் - ராஜசேகர் 
நாமக்கல் - தமிழ்மணி 
கரூர் - கே.ஆர்.என். தங்கவேல் 
கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ் 
அரக்ககோனம் - விஜயன் 
ஆரணி - கஜேந்திரன் 
விழுப்புரம் - பாக்கியராஜ் 
சேலம் - விக்னேஷ் 
நாமக்கல் - தமிழ்மணி 
ஈரோடு - ஆற்றல் அசோக்குமார் 
ராமநாதபுரம் - பா ஜெயபெருமாள்.

ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும் இன்னும் தேமுதிக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. பாமகவுடன் பெச்சுவார்த்தை நடத்தியது. கடைசி வரை பாமக அதிமுக கூட்டணியில் இடம் பெறும் என்று சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாமக பாஜக பக்கம் தாவிவிட்டது. இதனால், தற்போது தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

தேமுதிக 5 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டது. ஆனால் அதிமுக இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதனால், கூட்டணியை விரைந்து முடிக்க அதிமுக முனைப்பு காட்டுகிறது. புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் உள்ளது.

100 மணிநேர கடிதம் எழுதும் மராத்தான்

அசாதாரணமான அர்ப்பணிப்பு மற்றும் மொழியியல் திறமையை வெளிப்படுத்தி, டாக்டர் கலை புனிதன் 100 மணி நேரம் தொடர்ந்து எழுதுவதில் ஒரு தனித்துவமான சாதனையில் ஈடுபட்டார். 

மேலும் படிக்கச்